×

போர்க்கால அடிப்படையில் அரியலூர் துணை மின்நிலைய பகுதியில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரம்

ரிஷிவந்தியம் : தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்கவும், மின் இணைப்பு கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் மின் இணைப்பு வழங்குவதற்கும் ஏற்ப மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் படி பராமரிப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.  தமிழகத்தில் சமீபகாலமாக ஆங்காங்கே மின்தடை ஏற்படுவதாக மின்வாரியத்துக்கு புகார்கள் வருகின்றன. கடந்த ஆட்சியில் 2020 செப்டம்பர் மாதம் முதல் கடந்த 9 மாதங்களாக எவ்வித மின் பராமரிப்பு பணியும் நடக்கவில்லை. அதற்கு தேவையான உதிரிபாகங்கள், மின் பொருட்கள் கொள்முதல் செய்யப்படவில்லை. 9 மாதங்களாக பராமரிப்பு பணி நடக்காததால், சில இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. அதை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, ஜூன் 19ம் தேதி முதல் 10 நாட்களுக்கு மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன்படி ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் துணை மின்நிலையத்தில் இருந்து வடகீரனூர் மின்னூட்டியில் உயரழுத்த மின் பராமரிப்பு பணியானது உயர் மின்னழுத்த பாதைகளில் மரம் வெட்டுதல், சாய்ந்த கம்பங்களை சரி செய்தல், பழுதான பீங்கான்களை மாற்றுதல், மின் கம்பம் தாங்கும் கம்பிகளை சரி செய்தல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல், பழுதான மின்மாற்றிகள் சரிசெய்தல், துணை மின் நிலையத்தில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் மின் பொறியாளர்கள் ஜெயமூர்த்தி, சத்தியபிரகாசம், மாயக்கண்ணன் மேற்பார்வையில் நடந்து வருகிறது. …

The post போர்க்கால அடிப்படையில் அரியலூர் துணை மின்நிலைய பகுதியில் பராமரிப்பு பணியில் ஊழியர்கள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ariyalur sub-station ,Rishivanthyam ,Tamil Nadu ,Ariyalur Substation ,Dinakaran ,
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து